கடலூர் மாவட்டம் கண்டரக்கோட்டையில் மணல் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. கண்டரக்கோட்டையிலுள்ள அரசு அனுமதி பெற்ற இரண்டாம் நிலை மணல் விற்பனை நிலையத்தில் திடீரென விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
400 ரூபாய் என்றிருந்த மணலின் விலையை 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்தனர். இந்த திடீர் விலையேற்றத்தைக் கண்டித்து ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகள், தென்பெண்ணை ஆற்றில் நிறுத்தப்பட்டன. பின்னர் அதிகாரிகள் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பழைய விலைக்கே மணலை விற்பதாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டதை அடுத்து, போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் கைவிட்டனர்.