பாரத ரத்னா – காங்கிரஸ் ரத்னா??

பாரத ரத்னா – காங்கிரஸ் ரத்னா??
*************************************************
 ப்ளேபாய் எனும் ஆங்கில கவர்ச்சி பத்திரிக்கைக்கு நிர்வாண போஸ் கொடுத்த ஷெர்லின் சோப்ரா எனும் மாடல் தனது சமூக பணிக்காக(!) பாரத ரத்னா விருது கோரியுள்ளாள். “I deserve Bharath Ratna” என்கிறாள். இந்த பாரத ரத்னா விருது எவ்வாறு வழங்கபடுகிறது யாரெல்லாம் வாங்கினார்கள் என்பதை பார்த்தால் இந்த விருதின் மதிப்பு விமர்சனத்துக்குரியதாகவே உள்ளது. விருது வாங்கியோர், வழங்கப்பட்ட காலம், அப்போதைய ஆட்சியாளர் என்று தோண்டி துருவி பார்த்தால் என் கருத்தின் உண்மை புரியும்.

நேரு குடும்பத்தில் மட்டும் மூவர் இவ்விருதை பெற்றுள்ளனர். இவர்களின் தியாகங்களையும், திறமைகளையும், தேச நலனுக்கான பங்களிப்பையும் இவர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு ஊழல்/சமூக/போர் குற்றசாட்டுகளின் உண்மையை விவரம் தெரிந்தோர் எடுத்துரைத்தால் நலமாக இருக்கும். 

ஆனால் நேதாஜி, பகத்சிங், பெரியார், பாலம் கல்யானசுந்தரனார் இன்னும் கலை, இலக்கியம், விவசாயம், மருத்துவம், தொழில் போன்று பல்வேறு துறைகளில் சாதித்த பலரின் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இவர்களின் பொதுவான ஒற்றுமை காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் என்பதே. விருதின் மரியாதையை உறுதி செய்ய சில நல்லோர்க்கும் வழங்கபட்டிருப்பினும், தேசியவாதி/சுதந்திர போராளிகள் என்று விருது பெற்றுள்ள சிலரை பார்த்தால் இந்தியன் படத்தில் தாமரை பட்டயம் கேட்ட விஸ்வநாதய்யர் கதாபாத்திரம் தான் நினைவுக்கு வருகிறது. இவர்கள் காங்கிரசின் குடும்ப ஆட்சிக்கு துணை நின்ற விசுவாசிகள். ஒருவேளை மக்களிடம் விருதுகளை திரும்ப பெறுவது குறிப்பான விழிப்புணர்வு ஏற்பட்டால் பலரின் நிலை கேளிக்கூத்தாகிவிடும்.

பாரத ரத்னாவுக்கே இந்த நிலையெனில் பத்ம விருதுகள், தேசிய திரைப்பட விருதுகள், ராணுவ விருதுகளின் நிலை..????

இவற்றையெல்லாம யோசிக்கும்போது ஷெர்லின் சோப்ராவின் கோரிக்கைக்கு பெரிதாக அதிர்சியடைய தேவையில்லை என்பது உண்மை.
-இணைய செய்தியாளர் - சசிகுமார்